பிரபலமான ஜப்பானிய மோட்டார் பைக் தயாரிப்பு நிறுவனமான கவாசகி தனது நிஞ்சா வகை பைக்கை யாரும் ஓட்ட வேண்டாம் என கூறியுள்ளதுடன், அந்த பைக்குகளை திரும்ப பெற போவதாகவும அறிவித்துள்ளது.
ஜப்பானின் பிரபலமான கவாசகி மோட்டார் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட நிஞ்சா மாடல் அதிவேக பைக்குகள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தன. இந்தியா உள்பட பல நாடுகளிலும் இந்த பைக் நல்ல விற்பனை இலக்கை எட்டியது. இந்நிலையில் இந்த நிஞ்சா மாடல் பைக்குகளை திரும்ப பெறப்போவதாக கவாசகி நிறுவனம் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவாசகியின் Ninja ZX-6R ரக பைக்குகளின் எஞ்சின்களில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2024-25 உற்பத்தி ஆண்டில் தயாரிக்கப்பட்ட பைக் எஞ்சின்களில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த குறிப்பிட்ட யூனிட் பைக்குகளை உலகம் முழுவதிலும் இருந்து திரும்ப பெற கவாசகி முடிவு செய்துள்ளது.
மேலும் தங்களது திரும்ப பெறுதல் நடைமுறைகள் முடிவடைந்து, அனைத்து பைக்குகளும் திரும்ப பெறப்பட்டு பிரச்சினைகள் சரி செய்யப்படும் என அறிவித்துள்ள கவாசகி நிறுவனம், அதுவரை அந்த குறிப்பிட்ட மாடல் பைக்குகளை பயனர்கள் ஓட்ட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
Edit by Prasanth.K