எதற்கும் துணிந்தவன் படத்தின் தோல்விக்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து பாண்டிராஜ் இயக்கியுள்ள தலைவன் தலைவி படம் நேற்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க குணச்சித்திர வேடங்களில் யோகி பாபு, சரவணன், தீபா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படத்தில் விஜய் சேதுபதி ஆகாசவீரன் என்ற பரோட்டா மாஸ்டராக நடித்துள்ளார். ஆகாச வீரனுக்கும் அவர் மனைவி பேரரசிக்கும் திருமணத்துக்குப் பின்னர் அடிக்கடி நடக்கும் சண்டை சச்சரவுகளை நகைச்சுவை மற்றும் எமோஷனலாக படம் சொல்லியுள்ளது.
இந்நிலையில் படம் நேற்று ரிலீஸாகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களேக் கிடைத்துள்ளன. ஆனாலும் முதல் நாளில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.