ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்நாளில் வெள்ளிக்கிழமைகளிலே அம்மனுக்கு கூழ் வார்ப்பது வழக்கம். ஆடி மாதம் ஸ்பெஷல் கூழ் செய்வது எப்படி என பார்க்கலாம்.
Various Source
தேவையான பொருட்கள்: ராகி மாவு, பச்சரிசி, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு
1 கப் ராகி மாவில் 4 கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொள்ளவும்.
பச்சரிசியை மிக்ஸியில் போட்டு ரவா பதத்திற்கு பொறுபொறுவென அரைத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முதலில் பச்சரிசியை வேகவிடவும்.
Various Source
பின்னர் அதனுடன் ராகி மாவை கலக்கவும். உப்பு சேர்த்துக் கொள்ளவும்
நல்ல கொதி வந்ததும் அதை இறக்கி, ஆறியதும் தயிர் சேர்த்து தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை தூவினால் ஆடி ஸ்பெஷல் கூல் தயார்