கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகின்றனர் சுயாதீன இசைக்கலைஞர்கள். அதில் முன்னணியில் உள்ளார் சாய் அப்யங்கர். இவர் இசையமைத்து பாடி வெளியிட்ட கட்சி சேர, ஆச கூட மற்றும் சித்திரி புத்திரி ஆகிய பாடல்கள் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றன. இவர் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ், சூர்யா நடிக்கும் சூர்யா 45 மற்றும் ப்ரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம், சிம்பு நடிக்கும் அவரின் 49 ஆவது மற்றும் 51 ஆவது படம் மற்றும் அட்லி அல்லு அர்ஜுன் இணையும் படம் ஆகியவற்றுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர கார்த்தி 29 படத்துக்கும் அவர்தான் இசை என சொல்லப்படுகிறது.
இன்னும் ஒரு படம் வெளியாகாமல் இப்படி வாய்ப்புகள் குவிவது குறித்து ரசிகர்கள் வியந்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் சாம் சி எஸ் சாய்க்கு குவியும் வாய்ப்புகள் குறித்து சமீபத்தில் பேசியது சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இதுபற்றி தன்னுடைய சக்தி திருமகன் படத்தின் நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி “சாய் அப்யங்கர் திறமையோடு வந்திருக்கிறார். அதனால்தான் அவருக்கு வாய்ப்புகள் வருகின்றன. சாய் மற்றும் சாம் சி எஸ் ஆகிய இருவருமே திறமையானவர்கள்தான்” எனப் பேசியுள்ளார்.