இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பாக மான்செஸ்டரின் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணற, ஆனால் இங்கிலாந்து அணி எளிதாக ஓவருக்கு 4 ரன்கள் வீதம் எடுத்து விளையாடி வருகிறது. தற்போது ஆடிவரும் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் 7 விக்கெட்களை இழந்து 544 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் 150 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 188 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. தற்போது களத்தில் இங்கிலாந்து அணிக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடனும் லியாம் டாவ்சன் 23 ரன்களோடும் விளையாடி வருகின்றனர்.