Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எடை குறைப்பிற்கு சைவ உணவே சிறந்தது: புதிய ஆய்வு முடிவு!

Advertiesment
எடை குறைப்பு

Mahendran

, வெள்ளி, 25 ஜூலை 2025 (18:45 IST)
உடல் எடையைக் குறைப்பதில் குறைந்த கொழுப்பு சைவ உணவு முறை மிக சிறந்த பலனைத் தரும் என புதிய ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது. இந்த ஆய்வு, பிரபல மெடிட்டரேனியன் உணவு முறையுடன் ஒப்பிடப்பட்டது.
 
'ஃப்ரான்டியர்ஸ் இன் நியூட்ரிஷன்' (Frontiers in Nutrition) இதழில் வெளியான இந்த ஆய்வில், 62 அதிக எடை கொண்டவர்களுக்கு குறைந்த கொழுப்பு சைவ உணவும், மெடிட்டரேனியன் உணவும் 16 வாரங்களுக்கு வழங்கப்பட்டன.
 
ஆய்வின் முடிவில், சைவ உணவை பின்பற்றியவர்கள் சராசரியாக 13.2 பவுண்டுகள் 6 எடையைக் குறைத்ததுடன், அவர்களின் 'உணவு அமிலச் சுமை' கணிசமாக குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. ஆனால், மெடிட்டரேனியன் உணவுப் பிரிவில் எடையில் பெரிய மாற்றம் இல்லை.
 
விலங்குப் பொருட்கள் உடலில் அமிலச் சுமையை அதிகரித்து, வீக்கம் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு மாறாக, கீரைகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகள் எடை இழப்பை ஊக்குவித்து, ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை உருவாக்கும் என ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் ஹனா காலியோவா தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு, சைவ உணவின் ஆரோக்கிய நன்மைகளை மீண்டும் வலியுறுத்துகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருவளையங்கள் தொல்லையா? இயற்கையான வழியில் முக அழகைப் பாதுகாக்கும் எளிய குறிப்புகள்!