உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் உப்பு அதிகமாக பயன்படுத்தப்பட்டால் உடலுக்கே ஆபத்தானதாகவும் அமைகிறது. உப்பு எவ்வளவு சேர்த்துக் கொள்ள வேண்டும், அதிகம் சேர்த்தால் என்ன ஆகும் என பார்ப்போம்.
Various Source
அன்றாட உணவில் சுவைக்காக பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள சோடியம் உடலுக்கு அவசியமானதும் கூட
ஒரு நாளைக்கு மனித உடலுக்கு 1500 முதல் 2300 மில்லி கிராம் (ஒரு டேபிள் ஸ்பூன்) சோடியம் தேவைப்படுகிறது.
இதற்கு மேலான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளும்போது அது உடலின் பல பகுதிகளை பாதிக்க தொடங்குகிறது.
அதிகமான உப்பு எடுத்துக் கொள்வதால் அது செல்களுக்குள் உற்பத்தியாகும் நீருடன் இரத்தத்தில் கலந்து இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
Various Source
அதிக அளவிலான சோடியம் சிறுநீரகத்தை பாதிப்பதால் சிறுநீரகத்தில் கல் மற்றும் பிற கோளாறுகள் ஏற்படுகின்றன.
உப்பை அதிகமாக பயன்படுத்துவதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதோடு தசைப்பிடிப்பு, தசை வலி போன்றவை ஏற்படும்.
அதிகமாக சேர்த்துக் கொள்ளப்படும் சோடியமானது எலும்பில் உள்ள கால்சியத்தை கரைப்பதால் எலும்புப்புரை நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.