பொது இடங்களில் உறவு வைத்து கொள்ள அனுமதி...

சனி, 8 செப்டம்பர் 2018 (12:24 IST)
மெக்சிகோவில் உள்ள கவுதலஜாரா எனும் நகரில் பொது இடத்தில் காதல் ஜோடிகள்  உறவு வைத்தால் அதை போலீசர் தடுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

 
பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் அதீத உணர்ச்சியில் காதல் ஜோடிகள் உறவு வைத்துக்கொள்வது என்பது வெளிநாடுகளில் சகஜமான ஒன்று. இது தொடர்பான பல வீடியோக்களும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
 
அதேபோல், அமெரிக்காவை ஒட்டிய நாடான மெக்சிகோவில் உள்ள கவுதலஜாரா எனும் நகரில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் சமீபத்தில் தனிமையில் இருந்த ஒரு காதல் ஜோடி தங்களை மறந்து உறவில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் அந்த ஜோடியை துரத்தி அனுப்பினர்.. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
எனவே, இந்த விவகாரம் அந்த நாட்டு நகரசபையிலும் எதிரொலித்தது. பொது இடங்களில் உறவு வைத்துக்கொள்ளும் ஜோடிகளை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என அந்த பகுதி கவுன்சிலர் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நகரசபை, பொதுமக்கள் புகார் கொடுக்காத வரை பொது இடங்களில் இந்த செயலில் ஈடுபடும் காதலர்களை போலீசார் தொந்தரவு செய்ய வேண்டாம் என நகர நிர்வாகம் உத்தரவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஸ்டாலினுக்கு பதவிகள் எப்படி கிடைத்தது? அவரின் மனசாட்சிக்கு தெரியும் - அழகிரி