ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வரும் நிலையில் எதிர்கட்சியினர் கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்து பேசி வருகிறார். அப்போது அவர் நேருவால்தான் காஷ்மீர் பிரச்சினை இன்றளவும் நீடித்து வருவதாக பேசினார்.
இந்நிலையில் அவரது பேச்சுக்கு பதில் அளித்து பேசிய கனிமொழி எம்.பி “தமிழர்கள் எந்த விதத்திலும் நாட்டை விட்டுக் கொடுத்தது இல்லை. எங்களுக்கு தேசப்பற்று இல்லை என்பது போல அமித்ஷா பேசுகிறார். நேருவை காங்கிரஸை விட பாஜகதான் அதிகம் நினைவில் வைத்துள்ளது. பாஜகவினர் எப்போதும் நேருவை பற்றி அதிகம் பேசுவதால் இளைஞர்கள் நேருவை குறித்து படிக்கின்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முதல்முறையாக எதிர்கட்சிகளையும் நம்பி குழு அமைத்து உலக நாடுகளுக்கு செல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றி. ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக முதல்முறையாக பேரணி நடத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். எதிர்கட்சிகளை குற்றம் சாட்டவே அமித்ஷா பேசியது போல இருக்கிறது. கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்தார் பிரதமர், கங்கையையே வெல்வான் தமிழன்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K