இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி டெஸ்ட் போட்டிக்கே உரிய அம்சத்தோடு நடந்து சமனில் முடிந்துள்ளது. இதன் மூலம் தொடர் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கத்தில் உள்ளது.
இதையடுத்து இறுதி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் ஜூலை 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டியை இந்தியா வென்றால் மட்டுமே தொடரை இழக்காமல் சமனிலாவது முடிக்க முடியும். இந்நிலையில் ஐந்தாவது போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்பது குறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் பேசியுள்ளார்.
இது சம்மந்தமான கேள்விக்கு “ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் முழு உடல் தகுதியோடு உள்ளனர்” எனக் கூறியுள்ளார். முன்னதாக இந்த தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அவர் ஐந்தாவது போட்டியிலும் விளையாடத் தயாராக இருப்பதாக தெரிகிறது.