இந்திய சினிமாவில் ஹாலிவுட் ஸ்டுடியோக்களின் பாணியில் படம் எடுக்கும் நிறுவனம் யாஷ் ராஜ் பிலிம்ஸ். அந்த நிறுவனம் வரிசையாக சாகச துப்பறியும் ஜேம்ஸ் பாண்ட் வகையிலான படங்களைத் தயாரித்து வருகிறது. அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸாகி வெற்றி பெற்ற வார் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்துள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது.
'வார் 2' படத்தில் ஹ்ருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்துள்ளார் ஜூனியர் என் டி ஆர். இந்த படத்தை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்க, அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்துக்காக நடிகர் நடிகைகள் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஜூனியர் என் டி ஆர் 70 கோடி ரூபாயும், ஹ்ருத்திக் ரோஷன் 50 கோடி ரூபாயும், கியாரா அத்வானி 15 கோடி ரூபாயும் பெற இயக்குனர் அயன் முகர்ஜிக்கு 30 கோடி ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.