Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடிப்பெருக்கு விழாவின் சிறப்பு அம்சம்கள்...!!

ஆடிப்பெருக்கு விழாவின் சிறப்பு அம்சம்கள்...!!
பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவசைந்து காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று  கொண்டாடுகிறார்கள்.
தங்களை வாழவைக்கும், வளப்படுத்தும் காவிரியை அதன் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காகத் துவங்கப்பட்ட இந்த  விழா ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 
ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப் பூரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். பொதுவாகப்  பெருமாள் கோவில்களில் ஆண்டாளுக்குத் தனிச் சன்னதி இருக்கும். இந்த நாளில் ஆண்டாளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு  ஆராதிக்கப்படுவார்.
webdunia
ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள். அது  வெண்மையாக முளைத்து  வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள். ஆடி 18 அன்று பிற்பகல் வேளையில் முளைப்பாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். அங்கு பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவார்கள். பின்னர்  அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகுமணி ஆகியவற்றை நீரில்  விடுவர். இந்த விழாவில் சிறப்பு அம்சமாக ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலிப் பெண்கள் தாலிக்கு புது மஞ்சள் கயிறு  மாற்றிக்கொள்வார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (01-08-2019)!