திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எங்கள் கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜக கூட்டணியில் சில கட்சிகள் உள்ளன. அதிமுக-பாஜக கூட்டணிகளில் இன்னும் யார் யார் சேருவார்கள் என்பதை அந்தந்த அரசியல் கட்சிகளிடம் தான் கேட்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ளதால், "எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் - தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேருமா என்ற கேள்விக்கு, "எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று பதில் கூறினார்.
மேலும், சிபில் ஸ்கோர் பிரச்சனையால் விவசாய கடன்கள் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகப் பிரதமர் மோடியிடம் தான் எடுத்துரைத்ததாகவும், அதனால்தான் தற்போது சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.