இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள கூலி படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அது குறித்து மனம் திறந்து பேசியுள்ள இயக்குனர் லோகேஷ் “அமீர்கான் சார் மாதிரியான ஒரு நடிகர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஒத்துக்கொண்டது சாதாரண விஷயம் கிடையாது. அவரிடம் நான் இது குறித்துக் கேட்டபோது அவர் சொன்னது “நான் இதை செய்ய ஒரேக் காரணம் ரஜினி சார்தான்” என்றார்.” எனத் தெரிவித்துள்ளார். அமீர்கான் இருப்பதால் இந்த படம் வட இந்தியாவில் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.