ஆத்தி... இதுக்கு பேரு தோசையா... ? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ குமட்டிகிட்டு வருது!

செவ்வாய், 2 ஜூன் 2020 (16:21 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் சாக்லேட் தோசை சுட்ட வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் இதை பார்க்கும்போதே குமட்டிகிட்டு வருது எப்படி சாப்பிடுவீங்க என ட்ரோல் செய்து வருகின்றனர். அதற்கு கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் கற்பூர வாசனை கழுதைக்கு தெரியுமா என பதிலடி கொடுத்து வாக்குவாதம் செய்துள்ளனர்.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 

What’s cookin?

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் திருமணம் தேதியை அறிவித்தார் ரானா...! அதுவும் லாக்டவுனில் தானா...?