தினசரி நாம் உட்கொள்ளும் உணவுகளில் ஆரோக்கியம் வாய்ந்த ஒன்று கறிவேப்பிலை. ஆனால் அதை யாரும் உட்கொள்வதில்லை. கறிவேப்பிலை முடிவளர்ச்சிக்கு உதவுகிறது. கறிவேப்பிலையை வைத்து சுவையான துவையல் செய்வது எப்படி என பார்ப்போம்.
Various Source
தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை, தனியா விதை, இஞ்சி, புளி, வெல்லம், உளுந்து, தேங்காய் துறுவல், வர மிளகாய்
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு வர மிளகாய், உளுந்து, தனியா விதைகளை வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் கறிவேப்பிலை இலைகளையும், தோல் சீவிய இஞ்சி சிறுதுண்டும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அதனுடன் கொட்டை நீக்கிய புளி கொஞ்சமாக சேர்த்து வறுத்து பின்பு ஆற வைக்க வேண்டும்.
Various Source
ஆறிய பின் அவற்றை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தேங்காய் துறுவல் சேர்த்து அரைக்க வேண்டும்.
அரைத்து முடித்த பின்பு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமான கறிவேப்பிலை துவையல் தயார்.