Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

Advertiesment
கிருஷ்ணகிரி

Siva

, வியாழன், 3 ஜூலை 2025 (16:44 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி கிராமத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட 13 வயதுச் சிறுவன் ரோஹித், வனப்பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த புதன்கிழமை இரவு, அஞ்சட்டி கிராமத்தை சேர்ந்த ரோஹித், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவன் காணாமல் போனதை அடுத்து, குடும்பத்தினரும் கிராம மக்களும் சல்லடை போட்டுத் தேடி வந்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் வாகனம் அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டதையும் சிலர் பார்த்துள்ளனர்.
 
இந்தக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, இரண்டு உள்ளூர் இளைஞர்களை பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் ஓசூர்-ஒகேனக்கல் சாலைக்கு அருகிலுள்ள ஒரு காட்டு பகுதியில் ரோஹித்தின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
சிறுவனின் மரணச் செய்தியால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்சட்டி பேருந்து நிலையத்தில் திரண்டு, காவல்துறையின் மெத்தன போக்கைக் கண்டித்துப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரோஹித் காணாமல் போனவுடன் உடனடியாகப் புகார் அளித்தும், அவனை தேட காவல்துறை எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்று குடும்பத்தினர் கண்ணீர்மல்கக் குற்றம்சாட்டினர். "
 
இந்தச் சம்பவம் குறித்து தற்போது விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாகவும், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு