Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

Advertiesment
iOS 26

Prasanth K

, செவ்வாய், 10 ஜூன் 2025 (11:17 IST)

பிரபலமான ஆப்பிள் நிறுவனம் தனது ஐஃபோன் மாடல்களுக்கான புதிய இயங்குதள வசதியாக iOS 26ஐ வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

 

உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு ஃபோன்களின் விற்பனை அதிக அளவில் இருந்தாலும், ஆப்பிள் ஐஃபோன்களுக்கும் தனி மவுசு இருக்கவே செய்கிறது. ஐஃபோன்களின் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்கள், கேமரா குவாலிட்டி, செயல்திறன், இயங்குதளம் என பல காரணங்களுக்காக மக்கள் ஐஃபோனை விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல ஒவ்வொரு OS அப்டேட்டிலும் ஆப்பிள் பல சிறப்பம்சங்களை அளித்து வந்தது. 

 

அந்த வகையில் தற்போது ஐஃபோன் பயனர்களுக்காக புதிய iOS 26ஐ வெளியிடுகிறது ஆப்பிள் நிறுவனம்

 

iOS 26 இயங்குதளத்தின் சிறப்பம்சங்கள்:

 
  • டைனமிக் டைம் டிஸ்ப்ளே மற்றும் 3டி மூவ்மெண்ட் வால்பேப்பர் வசதியை கொண்டுள்ளது. ஃபோனை இடது, வலதாக நகர்த்தினால் வால் பேப்பரும் 3டியாக நகரும்
  • கேமரா, போட்டோஸ், சஃபாரி, ஆப்பிள் ம்யூசிக் உள்ளிட்ட ஆப்களுக்கு புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது.
  • குறுஞ்செய்திகளை லைவ் மொழிபெயர்ப்பு செய்யும் வசதி, ஆடியோவிலிருந்து எழுத்துக்கு மாற்றுவது உள்ளிட்டவற்றை நேரடியாக செய்ய முடியும்
  • Genmoji, Image Playground புதிய வடிவங்களில் வழங்கப்படுகிறது. விரும்பிய வகையிலான எமோஜிகளை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.
  • இன்னும் ஏராளமான ஆப் அப்டேட்கள், User Interface அனுபவங்களை இதுக் கொண்டுள்ளது.
 

iOS சப்போர்ட் செய்யும் ஐஃபோன் மாடல்கள்:

 
  • iPhone 16e
  • iPhone 16 and 16 Plus
  • iPhone 16 Pro and 16 Pro Max
  • IPhone 15 and 15 Plus
  • iPhone 15 Pro and 15 Pro Max
  • iPhone 14 and 14 Plus
  • iPhone 14 Pro and 14 Pro Max
  • iPhone 13 and 13 mini
  • iPhone 13 Pro and 13 Pro Max
  • iPhone 12 and 12 mini
  • IPhone 12 Pro and 12 Pro Max
  • iPhone 11
  • iphone 11 Pro and 11 Pro Max
  • iPhone SE (2nd gen and newer)
 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!