இந்த சீசன் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என ராஜஸ்தான் அணி 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியைக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். சில வாரங்களுக்கு முன்னர் நடந்த நடந்த ஐபிஎல் போட்டி இந்த சீசனின் மறக்க முடியாதப் போட்டியாக ரசிகர்களுக்கு அமைந்தது.
இதையடுத்து அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சேர்க்கப்பட்டு இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 20 பந்துகளில் அரைசதம் அடித்து குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு நேபாளத்துக்கு எதிரானப் போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டியில் கலக்கிய அவர், சர்வதேசப் போட்டிகளிலும் கலக்கத் தொடங்கியுள்ளார்.