இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் அடித்திருந்தது.
இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 168 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். அவர் இதுவரை 18 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 32 ரன்கள் எடுத்தால் அவர் இரட்டை சதம் அடிக்கும் பெருமையை பெறுவார்.
அவருடன் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 89 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தற்போது வாஷிங்டன் சுந்தர் களத்தில் விளையாடி வருகிறார். இந்திய அணி இதுவரை 110 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 419 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் குவிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.