இந்தியா முழுவதும் ரயில் சேவைகளை ஒரே செயலியில் ஒருங்கிணைக்கும் விதமாக ரயில்வே துறை RailOne செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக புறநகர் ரயில்களுக்கு டிக்கெட் புக் செய்ய UTS செயலி, வெளியூர் முன்பதிவுகளுக்கு IRCTC, Rail Connect என ஒவ்வொன்றுக்கும் பல செயலிகள் பயன்படுத்த வேண்டியிருந்த நிலையில் தற்போது அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து RailOne செயலி அறிமுகமாகியுள்ளது. இதை நேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.
Rail One செயலியில் உள்ள வசதிகள்:
-
முன்பதிவு டிக்கெட்டுகள், முன்பதிவில்லா டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளும் வசதி
-
ரயில் வந்து சேரும் நடைமேடை எண், கோச் வரிசை, ட்ராக்கிங், பிஎன்ஆர் நிலை சரிபார்த்தல் உள்ளிட்ட வசதிகள்
-
பயண திட்டமிடுதல், ரயில் சேவை உதவி எண்கள் மற்றும் விவரங்கள்
-
ரயிலில் உணவு முன்பதிவு செய்தல், ஆன்லை ஆர்டர் செய்யும் வசதி
-
ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி பெறும் வசதி
-
ரயில்வே இ வாலெட்டில் பணத்தை சேமித்து வைத்துக் கொண்டு எளிதாக டிக்கெட் புக் செய்யும் வசதி
-
MPIN மற்றும் பயொமெட்ரிக் லாக் இன் வசதிகள், கெஸ்ட் லாக் இன் வசதி