தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார். கடைசியாக இவர் நடித்த 'என்.ஜி.கே' படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படத்தில் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.
ஆனால், தற்போது இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் பிரபலங்கள் படப்பிடிப்புகள் ஏதுமின்றி வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கிண்டலுக்குள்ளாகியுள்ளது. அந்த வீடியோவில் சாலையை கடந்து வரும் அவரது கையில் மதுபான பாட்டில்கள் இருப்பதாகவும். மதுபானக்கடையில் இருந்து அதனை வாங்கிக்கொண்டு வெளியில் வருவதாகவும் கூறி இணையவாசிகள் வைரலாக்கினர். இதை கண்டு செம கடுப்பான ரகுல் ப்ரீத் சிங் "'வாவ்.., மெடிக்கல் ஷாப்பில் மதுபானங்கள் விற்கிறார்கள் என்பதை நான் இதுவரையிலும் அறிந்ததில்லை'' என கூறி கெத்தாக ரிப்ளை செய்து அத்தனை பேரையும் ஒரே கமெண்டில் ஆப் செய்துவிட்டார்.