Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஃபேல் போர் விமானங்களை படம் பிடித்த 4 சீனர்கள் கைது: உளவு பார்த்தார்களா?

Advertiesment
கிரீஸ்

Siva

, வியாழன், 10 ஜூலை 2025 (17:47 IST)
கிரீஸ் நாட்டில் ரஃபேல் போர் விமானங்களை ரகசியமாக படம் எடுத்த நான்கு சீனர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மூன்று ஆண்கள், ஒரு பெண் கொண்ட குழுவினர், கிரீஸ் நாட்டில் உள்ள பாதுகாப்பு படை தளத்திற்கு சென்று ரஃபேல் விமானங்களை ரகசியமாகப்படம் எடுத்ததாகத் தெரிகிறது. உடனடியாக இந்த தகவல் போர் பிரிவின் விமானப்படை காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நான்கு பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நான்கு பேருமே சீனாவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரஃபேல் தொடர்பான புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 
கிரீஸிலிருந்து இந்தியா ரஃபேல் விமானங்களை இறக்குமதி செய்துள்ளது என்பதும், சமீபத்தில் நடந்த 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் கூட விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தான், ரஃபேல் விமானங்களின் நம்பகத்தன்மை குறித்து உலகம் முழுவதும் வதந்திகள் பரவி வரும் நிலையில், சீனாவை சேர்ந்த 4 பேர் அதை படம் எடுத்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அவர்கள் சீனாவை சேர்ந்த உளவாளிகளா? அல்லது ரஃபேல் விமானம் குறித்து அறிவதற்காக சீன ராணுவத்தால் அனுப்பப்பட்டவர்களா? என்ற கோணத்தில் கிரீஸ் நாட்டின் விமான பாதுகாப்புப் படை அவர்களிடம் விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதி மட்டுமே பூர்த்தி செய்யப்பட்ட ரெஸ்யூம்.. வேலை தந்தால் மீதியை சொல்வேன் என குறிப்பு.. நெட்டிசன்கள் விமர்சனம்..!