Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 ஆவது டெஸ்ட்டில் களமிறங்கும் மிட்செல் ஸ்டார்க்… ரசிகர்கள் வாழ்த்து!

Advertiesment
மிட்செல் ஸ்டார்க்

vinoth

, வெள்ளி, 11 ஜூலை 2025 (12:40 IST)
தற்காலக் கிரிக்கெட் பெரிதும் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக மாறிவிட்டது. ஐசிசி அமல்படுத்தும் புதிய விதிகள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே உள்ளன. அதனால் பவுலர்கள் பெரியளவில் சாதனைகள் செய்வது அரிதாகிவிட்டது.ஆனால் அதிலும் விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் மிட்செல் ஸ்டார்க். மூன்று வடிவிலானக் கிரிக்கெட் போட்டிகளிலும் தன்னுடைய அனல் தெறிக்கும் பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்டார்க் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடக்கவுள்ள அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்ற மைல்கல் சாதனையை எட்டவுள்ளார். ஒரு வேகப்பந்துவீச்சாளர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

ஆஸி அணியில் இதற்கு முன்பாக இந்த க்ளென் மெக்ராத் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 35 வயதாகும் ஸ்டார்க் 395 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர்… ஜாகீர் கானை முந்திய ஜடேஜா!