பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான அஜிங்கிய ரஹானே தனக்கு வாய்ப்பு கிடைத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்புவதாக கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர் அஜிங்கிய ரஹானே. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் இவர் இடம்பெறாமலே இருந்து வருகிறார். அவ்வபோது ஐபிஎல் சீசன்களில் அவர் விளையாடி வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
சமீபத்தில் இதுகுறித்து வேதனையுடன் பேசிய அஜிங்கிய ரஹானே “டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு இப்போதுமே உண்டு. என்னை இந்தியாவின் டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டி தேர்வுக்குழுவிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்துள்ளேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஒரு வீரராக எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது சிறப்பான ஆட்டத்தை கொடுப்பதே என்னால் செய்ய முடிந்த விஷயம்” என்று பேசியுள்ளார்.
Edit by Prasanth.K