கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதியில் வென்று எம்.பியான நடிகை கங்கனா ரனாவத், தற்போது எம்.பியாக செயல்பட முடியாமல் தத்தளிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியில் பிரபல நடிகையாக முன்னர் இருந்த கங்கனா ரனாவத் கடந்த சில ஆண்டுகளில் பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார். அவருக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த ஊரான மண்டியில் போட்டியிட பாஜக சீட் கொடுத்தது. அவரும் வெற்றி பெற்று எம்.பி ஆனார்.
ஆனால் அதன் பின்னர் அவரால் எம்.பியாக சரிவர செயல்பட முடியவில்லை என கூறப்படுகிறது. சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டதை பார்வையிட அவர் சென்றபோது, மக்கள் சீரமைப்பு பணிகளை விரைந்து நடத்திட கோரியும், அவரது பணத்தை வைத்தாவது பிரச்சினையை சரி செய்யுமாறு கேட்டதும் கங்கனாவை உலுக்கி விட்டதாம். என்னிடம் பேரிடருக்கான நிவாரண நிதி இல்லை. மத்திய அரசாங்கம்தான் தர வேண்டும் என சொல்லி நழுவிக் கொண்டாராம்.
இந்நிலையில் சமீபமாக அவர் நடித்த எமெர்ஜென்சி உள்ளிட்ட படங்களும் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்பதோடு, அவரது சினிமா வாய்ப்புகளும் மங்கி வருகிறதாம்.
இதுகுறித்து சமீபத்தில் வேதனையோடு பேசியுள்ள கங்கனா “தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியபோது நாடாளுமன்றத்திற்கு வெறும் 60 முதல் 70 நாட்கள் வந்தால் போதும் என்றுதான் சொன்னார்கள். நான் மற்ற நாட்களில் எனது வேலையை பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தேன், ஆனால் எம்.பி பதவியில் இவ்வளவு வேலை இருக்கும் என நினைக்கவில்லை. என்னால் எனது பிற வேலைகளை பார்க்க முடியவில்லை” என்று புலம்பியுள்ளார்.
Edit by Prasanth.K