தொழிலாளர் சேமநல வைப்பு நிதி (EPF) பணத்தை அவசரத்திற்கு எடுப்பதற்காக விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது மத்திய அரசு.
அரசின் தொழிலாளர் சேமநல வைப்பு நிதி நிறுவனமானது நாடு முழுவதும் ஊதியம் பெறும் பல அரசு, அரசு சாரா தொழிலாளர்களின் மாத சம்பளத்தில் குறிப்பிட்ட விகிதத்தை பெற்று அதற்கு வட்டி மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்காக செயல்பட்டு வருகிறது.
எனினும் பயனர்கள் அவசர தேவைக்காக பணம் வேண்டுமென்றால் பிஎஃப் தளத்தில் விண்ணப்பித்து பெறலாம். முன்னர் இதற்கான கால அவகாசம் நீண்டதாக இருந்த நிலையில் தற்போது அவை உடனடியாக பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர தற்போது பயனர்கள் வசதிக்காக மேலும் சில விதிகளையும் மத்திய அரசு திருத்தியமைத்துள்ளது.
பிஎஃப் பணத்தை வீடு கட்டுதல், மருத்துவம் போன்ற செலவுகளுக்காக 90 சதவீதம் சேமிப்பு பணத்தை பெற முடியும். முன்னதாக இதற்காக 27 தரவுகளை சரிபார்க்க வேண்டியிருந்த நிலையில் தற்போது அது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிஎஃப் கணக்கு தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகே 90 சதவீத பணத்தை திரும்ப பெறலாம் என்ற நிலையில் அது மூன்று ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது, அவசரத் தேவைக்காக ஏடிஎம்மில் பணம் எடுக்கக் கூடிய தானியங்கி முறை ஒப்புதல் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K