Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களுக்கு இலவச கனரக வாகன ஓட்டும் பயிற்சி! தமிழக அரசு அறிவிப்பு! - உடனே விண்ணப்பிங்க!

Advertiesment
TN Skill

Prasanth K

, ஞாயிறு, 13 ஜூலை 2025 (12:06 IST)

தமிழக அரசு ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாக பல திறன்வளர் பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது. அவ்வாறாக தற்போது பெண்களுக்கு கனரக வாகனம் ஓட்டும் இலவச பயிற்சி அளிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இப்பயிற்சி "நான் முதல்வன் திட்டத்தின் கீழ்" தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் (Institute of Road Transport) மூலம் இலவசமாக அளிக்கப்படவுள்ளது.

 

இப்பயிற்சியில் சேர கீழ்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்

  • குறைந்தபட்சம் தமிழில் பேசவும் புரிந்துக்கொள்ளும் திறனும் இருத்தல் வேண்டும்.
  • 20 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
  • இலகுரக வாகன உரிமம் எடுத்து ஓர் ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும்
  • பி.எஸ்.வி. பேட்ஜ் (PSV Badge) பதியப் பெற்றிருக்க வேண்டும்
  • குறைந்தபட்சம் 155 செ.மீ. உயரமும், 40 கி.கி. எடையும் இருக்க வேண்டும். (பயிற்சிக்காக மட்டும்)
  • உடல் குறைபாடு இன்றி, அங்க அசைவில் குறைபாடின்றி, நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருக்காமல் இருத்தல் வேண்டும்
  • கண்ணாடி அணிந்தோ, அணியாமலோ கண்பார்வை திறன் Std (6/6) இருத்தல் வேண்டும். மேலும் நிறபேதம் அறிதலில் கண்பார்வை குறைவின்றி நல்ல திறனுடனும் இருக்க வேண்டும்.
  • ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியை எப்போதும் செயல் பாட்டில் இருக்குமாறு வைத்துக்கொள்ளவும்.

 

இந்த பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டும் பயிற்சி காலம் 65 வேலை நாட்கள் என கூறப்பட்டுள்ளது.

 

பயிற்சி நடைபெறவுள்ள மையங்கள்:

கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூர், திருச்சி (மிஸிஜி), கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, பொள்ளாச்சி, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர்

 

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் : 20 ஆகஸ்ட் 2025

 

விண்ணப்பம் மற்றும் மேல் விவரங்களுக்கு : https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கை வசதி: உத்தரவு பிறப்பித்த அதே நாளில் நிறுத்தி வைத்தது தமிழக அரசு