ஊரடங்கு உத்தரவின்போது மகளுக்கு திருமணம் நடத்திய ஓய்வு பெற்ற காவலர் கைது

புதன், 25 மார்ச் 2020 (20:05 IST)
ஊரடங்கு உத்தரவின்போது மகளுக்கு திருமணம்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சுமார் 30 பேர்களை கூட்டி மகளுக்கு திருமணம் செய்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
கேரளாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஒருவர் தனது மகளுக்கு நேற்று திருமணம் நடத்தி வைத்துள்ளார். இந்த திருமண வைபவத்தில் அவரது உறவினர்கள் நண்பர்கள் குழந்தைகள் உள்பட சுமார் 30 பேர் கலந்து கொண்டனர். இது குறித்த வீடியோ ஒன்று கேரள செய்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது
 
இதனை அடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த கேரள போலீஸ் கமிஷனர் திருமணத்தை நடத்திய போலீஸ் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்
 
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் ஐந்து பேருக்கு மேல் கூடக் கூடாது என்றும் அவ்வாறு கூட்டினால் சட்டவிரோதம் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில் ஓய்வுபெற்ற போலீஸ் காவலர் ஒருவர் 30 பேருக்கு மேல் கூட்டி தனது மகளின் திருமணத்தை நடத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சீனா, இத்தாலியை முந்தியது ஸ்பெயின்: அதிர்ச்சி தகவல்