14 வயது மாணவி ஒருவர் கர்ப்பமானதாகவும் அவரை அந்த மாணவியுடன் படிக்கும் மாணவர் தான் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படும் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவி கர்ப்பமாகி உள்ளார் என்பதை கண்டுபிடித்து அவரிடம் விசாரித்த போது அவருடன் படிக்கும் மாணவர் தான் தன்னிடம் எல்லை மீறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரியின் அடிப்படையில் மாணவர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து கொண்டிருப்பதாகவும் அப்போது கடந்த மே மாதமே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தற்போது அந்த மாணவி கர்ப்பமானதால் இந்த விஷயம் வெளியே வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மாணவரிடம் மேல்விசாரணை நடந்து வருவதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்