நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த வாரம் ரிலீஸாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் படத்துக்கு முன்பாக ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் சூயிங் கம் சாப்பிட்டுக் கொண்டே அலட்சியமாக ரசிகர்களோடு பேசி ட்ரோல் மெட்டீரியல் ஆனார் சூர்யா சேதுபதி. இதற்கு முன்பும் நான் வேற அப்பா வேற என்று சொன்னதும் ஆறு மாதங்களுக்கு மேல் ட்ரோல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் அனல் அரசு “சூர்யாவை விமர்சிப்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். நீங்கள் இதன் மூலம் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை. இந்த படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ள பலரின் வாழ்க்கையிலும் விளையாடுகிறீர்கள். ஒரு படத்தில் பலரது வாழ்க்கை அடங்கியுள்ளது. அதை நினைத்துப்பார்த்தால் நல்லது.” எனக் கூறியுள்ளார்.