Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தக் லைஃப் விநியோகஸ்தர்களுக்கு 150 கோடி ரூபாய் திருப்பித் தரவேண்டுமா கமல்ஹாசன்?... அடுத்த சிக்கல்!

Advertiesment
தக் லைஃப் திரை விமர்சனம்

vinoth

, சனி, 12 ஜூலை 2025 (10:42 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.

நாயகன் படத்துக்குப் பிறகு 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி இணைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு நிலவியது.  ஆனால் படம் ரிலீஸான பின்னர் ரசிகர்களை இந்த படம் ஈர்க்கவில்லை. அதுமட்டுமில்லாமல் மிக மோசமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக வசூல் பெரிய அளவில் சரிந்துள்ளது. உலகளவில் இந்த படம் 100 கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

தற்போது ஓடிடியில் ரிலீஸாகி பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இந்த படத்தை நேரடியாக தன்னுடைய நிறுவனத்தின் பெயரில் கமல்ஹாசன் வெளியிட்டார். இதனால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அவர்களுக்கு சுமார் 150 கோடி ரூபாய் அளவுக்கு திருப்பிக் கொடுக்கவேண்டிய சூழல் உள்ளதாக சினிமாப் பத்திரிக்கையாளர் ஜெ பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலனுடன் விம்பிள்டன் போட்டியை ரசித்த ஜான்வி கபூர்.. விரைவில் திருமணமா?