கடந்த சில ஆண்டுகளில் தமிழ் வெகுஜன வாசகப்பரப்பில் அதிகளவில் வாசகர்களைக் கவர்ந்த நாவலாக இருப்பது மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல். இந்த நாவலை இயக்குனர் ஷங்கர் திரைப்படமாக இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்த நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுள்ளதைக் கொண்டாடும் விதமாக சென்னையில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி விகடன் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அவரது பேச்சில் “இந்த நாவலைப் பற்றி பேச என்னை ஏன் கூப்டாங்க? சிவகுமார் இருக்காரு. இந்த வயசுலயும் ஆறு மணிநேரம் தொடர்ச்சியாக பேசும் திறம கொண்டவரு. அப்படி இல்லயா? கமல் இருக்காரு. அவர் ரொம்ப அறிவாளி. ஆனா இவங்கள எல்லாம் கூப்டாம 75 வயசுலயும் கூலிங் க்ளாஸ் போட்டுகிட்டு ஸ்லோ மோஷன்ல நடந்து வர என்னை ஏன் கூப்டாங்கன்னு… சிலர் கேட்கக் கூடும்…” என ஜாலியாக தன்னைத் தானே கிண்டல் அடித்து பேசியுள்ளார்.