Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரவு உணவை எப்போது எடுக்க வேண்டும்?

Advertiesment
Dinner - food

Mahendran

, திங்கள், 7 ஜூலை 2025 (18:22 IST)
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு  உணவுக்கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, இரவு உணவை உட்கொள்ளும் நேரத்தில் மிகுந்த கவனம் தேவை. ஏனெனில், தூங்குவதற்கு எவ்வளவு நேரத்திற்கு முன்பு சாப்பிடுகிறோம் என்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். 
 
நமது உடல் சர்க்காடியன் ரிதம் (Circadian Rhythm) எனப்படும் ஒரு உள்ளார்ந்த கடிகாரத்தின்படி செயல்படுகிறது. இது தூக்கம், உடல் ஆற்றல், ஹார்மோன்கள், வளர்சிதை மாற்றம் (Metabolism), செரிமானம் என ஒட்டுமொத்த உடலியல் அமைப்பையும் நிர்வகிக்கிறது.
 
இரவில் தாமதமாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடும்போது, அதனை செரிமானம் செய்வதற்கு உடல் அதிக நேரம் போராட வேண்டியிருக்கும். குறிப்பாக, இரவில் தூக்கத்தின்போது ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் உடல் இந்த செரிமான வேலையை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். 
 
தூங்குவதற்கு முன்பு சீக்கிரமாக, அதாவது இரவு 7 மணி அளவில் சாப்பிடும்போது, அந்த உணவு செரிமானம் ஆவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்கும். இதனால், உடலில் உள்ள கொழுப்பை சரி செய்து, அதிக கொழுப்பை எரிக்க வாய்ப்பு கிடைக்கும்.
 
இரவு 9 மணிக்கோ அல்லது அதற்கு பிறகோ சாப்பிடும்போது, வளர்சிதை மாற்றம் மெதுவாக நடப்பதற்கு வழிவகுக்கும். இது கூடுதல் பசி உணர்வை உருவாக்கி, அதிகம் சாப்பிட தூண்டும். இதனால், சோர்வையும் உணரக்கூடும்.
 
எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரவு உணவை 7 மணிக்குள் எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

IIRSI 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்!