Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2026 தேர்தலில் விஜய் தான் ஆட்டநாயகன்.. ஒரே தேர்தலில் 2 திராவிட கட்சிகளுக்கும் ஆப்பு..!

Advertiesment
தமிழகத் தேர்தல்

Siva

, வெள்ளி, 11 ஜூலை 2025 (15:57 IST)
2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் விஜய் தான் 'ஆட்டநாயகன்' என்றும், இந்த ஒரே தேர்தலில் அவர் இரண்டு திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பி விடுவார் என்றும் அரசியல் விமர்சகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
விஜய் அரசியல் கட்சி தொடங்கி இன்னும் களத்தில் இறங்கவே இல்லை. அதற்குள்ளேயே அவருக்கு 20% வாக்குகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அவர் களத்தில் இறங்கிவிட்டால் இன்னும் 10 முதல் 15 சதவீத வாக்குகள் அதிகரிக்கும் என்றும், 35 சதவீத வாக்குகளை மட்டும் விஜய் பெற்றுவிட்டால் அவர்தான் ஆட்சி அமைப்பார் என்றும் கூறி வருகின்றனர்.
 
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுக மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்றும், திமுக கடந்த நான்காண்டு காலம் செய்த ஆட்சியால் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் இந்த இரண்டு திராவிட கட்சிகளின் மீது ஒரே நேரத்தில் மக்களுக்கு கோபம் வருவது அநேகமாக இந்த ஒரு தேர்தல் தான் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த கோபம் அப்படியே விஜய்க்கு வாக்காக மாறும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.
 
ஆனால், இந்த கூற்றை சிலர் ஏற்கவில்லை. 50 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு திராவிட கட்சிகளும் அடிப்படை உள் கட்டமைப்புடன் கட்சியை நடத்தி வருகின்றன என்றும், அவ்வளவு எளிதில் ஒரு புதிய கட்சி இந்த இரண்டு திராவிட கட்சிகளை வீழ்த்த முடியாது என்றும் கூறப்படுகின்றது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்போன், ஹெல்மெட்டில் கண்ணுக்கு தெரியாத நோய்க்கிருமிகள்.. தமிழக இளைஞர்களின் அசத்தல் கண்டுபிடிப்புகள்..!