ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, கீரவாணி இசையமைக்கிறார். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி உள்ளதால் ஏராளமான காட்டு விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.
இந்த படத்தில் முக்கியமானக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க மாதவன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் அவர் மகேஷ் பாபுவுக்குத் தந்தை வேடத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.