வாஸ்துப்படி பூஜையறையை எங்கு எவ்வாறு அமைப்பது.....?

பொதுவாக வீட்டில் பூஜையறையை ஈசானிய மூலையில் அமைக்க வேண்டும் என்ற கருத்து பலரால் கூறப்பட்டு வருகின்றது. வாஸ்து முறைப்படி பூஜை அறையின் வடகிழக்குப் பகுதியில் அதிக பாரத்தை வைக்க கூடாது. மேலும் வடகிழக்கு மூலையில் மாடம் அமைப்பது  சிறந்தது ஆகாது.
வாஸ்து முறைப்படி பூஜை அறையின் மேற்குச் சுவரில்பூஜை சம்பந்தப்பட்ட பொருட்கள், விக்ரங்கள், படங்களை தவிர வேறு எந்த  பொருளையும் வைக்கக் கூடாது, மேலும் இந்த சுவரில் ஜன்னல் வைப்பது சிறந்தது ஆகாடு.
 
பூஜை அறையின் வடக்கில் ஒரு ஜன்னலை வைப்பது சிறந்தது. அல்லது ஜன்னல் அமைக்கும் போது அதன் வழியே சூரிய ஒளி பூஜை அறைக்குள் வரும். இதனால் நன்மைகள் உண்டாகும்.
 
கடவுள் படங்களை மேற்கு அல்லது தெற்குச் சுவரில் மாட்ட வேண்டும். அப்போது தான் அவை முறையே கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியிருக்கும், கடவுள் படங்கள் மாட்டப் பட்டிருக்கும் உயரத்திற்கு மேலே எந்தப் பொருளும் மாட்டப் கூடாது.

பூஜை அறையில்  கடவுள்களின் உருவத்திற்கு மலர்கள் போடும்போது அந்தக் கடவுள்களின் முகமும், பாதமும் மலர்களால் மறைந்து விடாதபடிப் பார்த்துக்  கொள்ள வேண்டும். பூஜை அறையில் விளக்குகளை தெற்கு அல்லது வடக்கு நோக்கி வைக்கக் கூடாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அட்சய திரிதியை நாளில் நடைபெற்றதாக கூறப்படும் சில முக்கிய நிகழ்வுகள்...!!