இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே பலமுறை கூறிய நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் அர்மேனியா - அஜர்பைஜான் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் "இந்தியா - பாகிஸ்தான் ஒப்பந்தத்தை தொடர்ந்து மற்றொரு அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் பெரிதாக மோதி கொள்ள இருந்தனர். ஒரு அணுசக்தி மோதல் நடக்க இருந்தது. ஆனால், என்னுடைய முயற்சியால் அது தடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில், மத்திய அரசு அதை தொடர்ந்து மறுத்து வருகிறது. நோபல் பரிசு பெற வேண்டும் என்பதற்காக டிரம்ப் உலகில் உள்ள அனைத்து போரையும் நான்தான் நிறுத்தினேன் எனக் கூறிவரும் நிலையில், அவருடைய பேச்சை அமெரிக்க மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதுதான் உண்மையாக உள்ளது.