அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி விதித்ததை தொடர்ந்து, அமெரிக்காவின் முன்னணி வர்த்தக நிறுவனங்களான வால்மார்ட் மற்றும் அமேசான், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான ஆர்டர்களை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளன. இந்த திடீர் முடிவு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய சில்லறை வர்த்தக நிறுவனங்களான டார்கெட் மற்றும் கேப் ஆகியவையும் இந்தியாவில் ஆர்டர் செய்வதை நிறுத்தி வைத்துள்ளன. குறிப்பாக, துணி உள்ளிட்ட ஏற்றுமதிப் பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் வரிச்சுமையை பொறுப்பேற்குமாறு அமெரிக்க நிறுவனங்கள் இந்திய ஏற்றுமதியாளர்களிடம் வலியுறுத்தி வருவதாகவும், ஆனால் இதற்கு இந்திய நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வர்த்தக போர், இந்திய ஏற்றுமதி துறையை நேரடியாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.