17 ஆண்டுகளாகக் காத்திருந்து ஆர் சி பி அணி இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்த அணி இந்த ஆண்டு கோப்பையை வெல்ல க்ருனாள் பாண்ட்யாவும் முக்கியக் காரணமாக அமைந்தார். இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 2 விக்கெட்களை வீழ்த்தி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த க்ருனாள் பாண்ட்யா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
இதையடுத்து சிறப்பாக விளையாடிய க்ருனாள் பாண்ட்யா அடுத்து நடக்கவுள்ள ஆசியக் கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. நிறைய வீரர்கள் காயம் காரணமாக அணிக்கு வெளியில் இருப்பதால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் க்ருனாள் பாண்ட்யா போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடரை நடத்தி வருகிறது, ஆசியக் கிரிக்கெட் கவுன்சில், இதன் அடுத்த சீசன் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி பத்தொன்பதாம் தேதி வரை நடக்கவுள்ளது.