இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்த நிலையில் மூன்று டெஸ்ட்களையும் தோற்று இந்திய அணி வொயிட்வாஷ் ஆனது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி நியுசிலாந்திடம் வொயிட்வாஷ் ஆனது இதுதான் முதல் முறை.
இந்த தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட கேப்டன் ரோஹித் “நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். அதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். நியுசிலாந்து அணி எங்களை விட எல்லா விதத்திலும் சிறப்பாக விளையாடினர். நான் ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சரியாக விளையாடவில்லை. ஒரு அணியாக நாங்கள் சரியாக விளையாடத் தவறிவிட்டோம். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் விரைவில் நடக்கவுள்ள பார்டர் கவாஸ்கர் தொடர்தான் ரோஹித் ஷர்மாவுக்குக் கடைசி தொடராக இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பிறகு அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. ரோஹித் ஷர்மாவுக்கு தற்போது 37 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.