இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிக்கு பிறகு பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினுடன் சந்தித்து பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவுக்கும், ட்ரம்புக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் பிரதமர் மோடி. ஆனால் தற்போது நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது. இந்தியாவிற்கு அதிகமான வரிகளை விதித்த ட்ரம்ப், பாகிஸ்தானோடு நட்பு பாராட்டி வருகிறார். இந்தியாவின் அதிவேக பொருளாதார வளர்ச்சி குறித்த ட்ரம்ப்பின் புகைச்சலே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
ஆனால் அதற்கு சற்றும் தளராமல் இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை தொடர்வதிலும், மற்ற நாடுகளுடன் நட்புறவை நீடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஜப்பான், சீனா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்துள்ளார். நேற்று சீனாவில் அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருடன் பிரதமர் மோடியும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகள் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்பதாக ஏற்கனவே சீனா தெரிவித்திருந்தது. இந்தியாவுக்கு ரஷ்யா தொடர்ந்து கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது. இந்தியா, ரஷ்யா, சீனா என ஆசியாவின் மிகப்பெரிய 3 தேசங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளது அமெரிக்காவுக்கு பெரிய அடியாக இருக்கும் என பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K