Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வாகன சேவைகள்.. முழு விவரங்கள்..!

Advertiesment
திருப்பதி

Siva

, செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (16:08 IST)
திருமலை ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு நடைபெற உள்ளது. இவ்விழா குறித்த முழுமையான தகவல்களை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
 
அங்குரார்ப்பணம்: பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு முந்தைய நாளான செப்டம்பர் 23 ஆம் தேதி, 'அங்குரார்ப்பணம்' எனப்படும் முளைப்பாரி பூஜை நடைபெறுகிறது.
 
கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்: செப்டம்பர் 16 ஆம் தேதி, கோவிலில் தூய்மைப் பணியான 'கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்' நடைபெறும்.
 
கொடியேற்றம்: செப்டம்பர் 24 ஆம் தேதி மாலை 5.43 மணி முதல் 6.15 மணி வரையிலான மீன லக்னத்தில், பிரம்மோற்சவத்தின் தொடக்கமாகக் கொடியேற்ற நிகழ்வு இடம்பெறும்.
 
பிரம்மோற்சவத்தின் ஒன்பது நாட்களிலும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் உற்சவர் மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
 
செப். 24: பெரிய சேஷ வாகனம்.
 
செப். 25: சிறிய சேஷ வாகனம் (காலை), ஹம்ச வாகனம் (இரவு).
 
செப். 26: சிம்ம வாகனம் (காலை), முத்துப்பந்தல் வாகனம் (இரவு).
 
செப். 27: கல்ப விருட்ச வாகனம் (காலை), சர்வ பூபால வாகனம் (இரவு).
 
செப். 28: மோகினி அவதாரம் பல்லக்கு (காலை), கருட சேவை (மாலை 6.30 மணி).
 
செப். 29: அனுமந்த வாகனம் (காலை), தங்கத் தேரோட்டம் (மாலை 4 மணி), யானை வாகனம் (இரவு).
 
செப். 30: சூரிய பிரபை வாகனம் (காலை), சந்திர பிரபை வாகனம் (இரவு).
 
அக். 1: தேர்த்திருவிழா (காலை 7 மணி), குதிரை வாகனம் (இரவு 7 மணி).
 
அக்டோபர் 2 ஆம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் 'சக்கர ஸ்நானம்' எனப்படும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெறும்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிறந்து 48 மணி நேரம் ஆன குழந்தைகளை எலிகள் கடித்ததால் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையின் அவலம்..!