சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின், மாநாட்டுக்கு பின் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக ஒரே காரில் ஒன்றாக பயணம் செய்தனர்.
தியான்ஜின் நகரில் நடந்த இந்த உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசிய நிலையில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த சிறப்பான பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில், புதின் உடன் மேற்கொண்ட இந்த பயணம் குறித்துப் பகிர்ந்து, 'இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு ஒரே காரில் செல்வதாகவும், புதின் உடனான உரையாடல் ஆழமானது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.