முதல் கணவரின் ரகசியத்தை உடைத்த சமந்தா - உச்சகட்ட கடுப்பில் நாக சைதன்யா ரசிகர்கள்!

சனி, 9 நவம்பர் 2019 (14:31 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  
 
இந்நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய முதல் கணவர் என்று கூறி அவர் வளர்த்து வரும் நாயின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஹாஷ்  என்ற அந்த நாயின் கழுத்தில் நம்பர் ஒன் ஹஸ்பென்ட் என டேக் இருந்ததை  கண்டு நாக சைதன்யா ரசிகர்கள் கடுப்பில்  கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர் . 
 
இதற்கு முன்னர் கூட இதே போன்று,  எனது கணவருக்கு தலையணை தான் அவரது முதல் மனைவி...அவரது முதல் மனைவியுடன் நான் படுக்கையை பகிர்ந்துள்ளேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்திய குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கமலின் அணுகுமுறையே வேறு தான் - பூஜா குமார் ஓபன் டாக்!