தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'ஜனநாயகன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குநர் எச். வினோத், அடுத்ததாக ரஜினி படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் ரஜினி படத்தை இயக்கவில்லை என்றும், அதேபோல் தனுஷுக்கு கதை சொல்லி வைத்திருந்த படத்தை இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், அந்த படத்தையும் அவர் உடனடியாக இயக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே, 'ஜனநாயகன்' படத்தை முடித்தவுடன் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, 'தீரன் அத்தியாயம் ஒன்று' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான திரைக்கதையை அமைப்பதற்காக ஆறு மாதங்கள் அவகாசம் எடுத்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதற்குள் கார்த்தி ஏற்கனவே கமிட் ஆகி உள்ள படங்களை முடித்துவிட்டு எச். வினோத் படத்திற்கு வருவார் என்று கூறப்பட்டுள்ளது. இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி தற்போது ஒரு படத்தில் நடிக்க இருக்கும் நிலையில், இதை முடித்துவிட்டு 'கைதி 2' படத்தில் நடிப்பார் என்றும், இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு எச் வினோத்தின் படத்திற்கு அவர் செல்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது.