Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதியை சாக்கா வச்சு ஃபிகருங்களோட ஜல்ஸா பண்ண சதிஷ் - வீடியோ

webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (13:28 IST)
தமிழ் சினிமாவில் நடிகர்களாக நிலைத்து நிற்பதும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. வாரிசு நடிகர்களாக இருந்தால் கூட அவர்களுடைய நடிப்பு, மற்றும் கதை தேர்வு உள்ளிட்டவை மக்களுக்கு பிடித்தால் மட்டுமே நடிகர்களாக நிலைக்க முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.

இதே நிலை தான் காமெடி நடிகர்களுக்கும், வித்தியாசமான காமெடி மூலம் அவர்கள் தங்களை நிரூபித்தால் மட்டுமே திரையுலகில் ஜெயிக்க முடியும். அந்த வகையில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ். மேடை நாடகங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி தற்போது பெரிய திரையில் அசத்திவரும் சதீஷ்.. விஜய், தனுஷ் , சிவகார்த்திகேயன் , என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த சதீஷ்,  ஆங்கர் பாவனாவுடன் சேர்ந்து  5 பாடல்களுக்கு 5 விதமான காஸ்ட்யூம்கள் போட்டு நடனமடிய விடியோவை வெளியிட்டு விஜய்க்கு டெடிகேட் செய்து வாழ்த்தியுள்ளார். இதனை கண்ட இணையவாசி ஒருவர், " தளபதி பர்த்டேவை காரணமா வச்சு ஃபிகருங்க வீட்டில டான்ஸ் ஆடினால் ஒன்னு சொல்லமாட்டாங்க என்ற தைரியத்துல இப்படி ஆட்டம் போடுறீங்களா என கிண்டலடித்து கமெண்ட் செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

சூரரைப் போற்று பாடல் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த அருண்ராஜா காமராஜ் !