Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’மெர்சல்’ நாயகனுடன் ஜல்லிக்கட்டு நாயகர்? தவெக - ஓபிஎஸ் கூட்டணி? - பண்ருட்டி ராமச்சந்திரன் ஓபன் டாக்!

Advertiesment
OPS Vijay alliance

Prasanth K

, ஞாயிறு, 27 ஜூலை 2025 (15:46 IST)

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன், ஓபிஎஸ் கூட்டணி வைத்தால் அந்த கூட்டணி வலிமை பெறும் என பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார்.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த ஓபிஎஸ்ஸின் அதிமுக தொஉமீகு இந்த சட்டமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணியில் தொடர விரும்புவதாக தெரிகிறது. ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளதால் ஓபிஎஸ்க்கு அழுத்தம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும் தற்போது தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு நடத்தினார். இதனால் ஓபிஎஸ் வட்டாரம் அப்செட்டில் உள்ளதாம். இதை ஏற்கனவே கணித்த ஓபிஎஸ் புதிய கட்சி தொடங்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். விரைவில் மதுரையில் மாநாடும் நடத்த உள்ளார். அதன் பிறகு கட்சி கூட்டணி முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் “தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறுவதுதான் சரியாக இருக்கும். பாஜக புறக்கணிப்பதை ஓபிஎஸ் ஒரு வரப்பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பாஜகவை வளர்க்கும் எந்த கூட்டணியும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தராது/

 

மதியாதார் வாசலை மிதிக்க மாட்டேன் என ஓபிஎஸ் வெளியேற வேண்டும். ஓபிஎஸ் விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் தென்மாவட்டங்களில் பலம் பெற முடியும்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!