இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான TCS நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபமாக ஏஐ டெக்னாலஜியின் வரவால் பல ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது. கூகிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய ஐடி நிறுவனமான TCS (Tata Consultancy Services) தனது ஊழியர்களில் 2 சதவீதம் பேரை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஏஐ ஆட்டோமேஷன் செயல்பாடுகள், பணியாளர்கள் திறன் இடைவெளி உள்ளிட்ட பல காரணங்களால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் நடப்பு நிதியாண்டில் நீக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது ஐடி ஊழியர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K