Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகின் நம்பகத்தன்மை மிக்க ஜனநாயக தலைவர் பட்டியல்.. மோடி தொடர்ந்து முதலிடம்?

Advertiesment
பிரதமர் மோடி

Siva

, திங்கள், 28 ஜூலை 2025 (07:53 IST)
உலக அளவில் மிகவும் நம்பகமான ஜனநாயக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார். 
 
அமெரிக்காவின் 'மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், இந்தியாவில் 75% பேர் மோடியின் தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
முக்கியத் தலைவர்கள் நிலை:
 
பிரதமர் மோடி: 75% ஆதரவு (இந்தியா)
 
லீ ஜே மியுங் (தென் கொரியா): 59% ஆதரவு (இரண்டாம் இடம்)
 
ஜேவியர் மிலே (அர்ஜென்டினா): 57% ஆதரவு (மூன்றாம் இடம்)
 
டொனால்ட் டிரம்ப் (அமெரிக்கா): 44% ஆதரவு (எட்டாம் இடம்)
 
பிரதமர் மோடி சமீபத்தில் 4,078 நாட்கள் பிரதமராக பதவி வகித்து, இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்தார். இதன்மூலம், ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு இரண்டாவது நீண்ட காலம் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இப்போது அடுத்ததாக  உலகின் நம்பகத்தன்மை மிக்க ஜனநாயக தலைவர் என்ற சர்வதேச அங்கீகாரமும் மோடிக்கு கிடைத்துள்ளதால் பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணியில் மூன்று சதங்கள்.. போட்டியை டிரா ஆக்கிய மூவரணி.. ஸ்கோர் விவரங்கள்..!